யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறினார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கினால், முதல் மாநிலமாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் கூறினார்.
வரும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கவனத்துடன் விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.