தமிழ்நாடு

மிரட்டலாக யோகா செய்து காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Sinekadhara

சென்னையில் சித்த மருத்துவ வார் ரூமை திறந்துவைத்து ஆய்வு மேற்கொண்டார் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். 

கொரோனா தாக்கத்தை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பு கட்டளை மையம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 65 மருத்துவர்கள், 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் கணினி மூலம் சுகாதார பேரிடரை கையாண்டு வருகின்றனர். இந்த தொடுதிரை வழியே 24 மணி நேரமும், மருத்துவ படுக்கை, ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட தரவுகளை மாநிலம் முழுவதும் கட்டளை மையம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், இன்று அரசினர் அறிஞர் அண்ணா இந்தியமுறை மருத்துவமனையில் ’சித்த மருத்துவ வார் ரூம்’ ஒன்றை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இந்த மையத்தை ஆய்வு செய்த அவர் யோகா பயிற்சியிலும் கலந்துகொண்டார்.