சூழலுக்கு ஏற்ப ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்குமாறு கடை ஊழியர்களுக்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது ‘நிவர்’ புயலமாக மாறியுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மழை அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப ரேஷன் கடைகளை திறக்கலாம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சூழலுக்கு ஏற்ப ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்குமாறு கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.