தமிழ்நாடு

நிவர் முன்னெச்சரிக்கை: ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

webteam

நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் கூறுகையில், “பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்கூட்டியே உணவுப்பொருட்களை வாங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.