தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!

கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!

sharpana

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 ஆம் தேதி அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர்,  தற்போது எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.