தமிழ்நாடு

நல்லதையே செய்யுங்கள்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய அமைச்சர் ஜெயக்குமார்

நல்லதையே செய்யுங்கள்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய அமைச்சர் ஜெயக்குமார்

webteam

நல்லவர்களாக இருங்கள்; நல்லதையே செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதி மாணவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தினார்.

சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தினார். ராயபுரத்திலுள்ள மாநகராட்சி பள்ளிக்குச் சென்ற அமைச்சர், கூடுதல் கட்டடத்தை திறந்துவைத்தார். 

இதையடுத்து மாணவர்களை அழைத்த அமைச்சர், ஹெச்.டூ.ஓ என்றால் தண்ணீர் என்று மாணர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நல்லவர்களாக இருங்கள்; நல்லதையே செய்யுங்கள் எனவும் கரும்பலகையில் ஆங்கிலத்தில் எழுதி அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தினார்.