குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “எந்த ஓட்டையும் இல்லாமல் இனி வரும் காலங்களில் தேர்வு நடத்தப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேர்வு எழுதிய 16 லட்சம் பேரில் சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக மற்றவர்களை நிராகரிக்க முடியுமா? தேர்வை ரத்து செய்தால் நியாயமாக தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பாதிப்படைவார்கள்.
ஊழியர்கள் சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக டி.என்.பி.எஸ்.சி.யை ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்லக்கூடாது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.