பல்வேறு கோரிக்கைகளுடன் போராடும் மீனவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்கும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து 2 ஆவது நாளாக நாகையில் மீனவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். நாகை மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன், நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஓ.எஸ் மணியன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.. மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இலங்கை வெளியுறவுத்துறை செயலருடன், இந்திய அதிகாரிகள் டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.