தமிழ்நாடு

2 மணி நேரத்தில் இடிப்பு; 3 நாளில் தரைமட்டம்: அமைச்சர் தகவல்

2 மணி நேரத்தில் இடிப்பு; 3 நாளில் தரைமட்டம்: அமைச்சர் தகவல்

webteam

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்னும் 2 மணி நேரத்தில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ’சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்னும் 2 மணி நேரத்தில் தொடங்கும். 3 நாளில் கட்டடம் முழுவதும் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும். கட்டடத்தை இடிப்பதற்கான செலவு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படும்’ என்றார். சென்னை தி.நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ, இரண்டாவது நாளாக இன்று வரை எரிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, சென்னை சில்க்ஸ் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்திருந்தார்.