தமிழ்நாடு

சிலைக்கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு.. பொன். மாணிக்கவேல் அதிரடி

Rasus

சிலைக்கடத்தல் விவகாரத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா, வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

யானை ராஜேந்திரன் மனுவை நிராகரித்த நீதிபதி, பொன்.மாணிக்கவேலின் இணைப்பு மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக் கடத்தல் விசாரணை நேர்மையாக நடைபெற்று வருவதாக வாதிட்டார். சிலைக் கடத்தல் சம்பவங்களில் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து பேசிய நீதிபதி, இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.