திருத்தணி கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் கோபமடைந்த அமைச்சர் ஆய்வை பாதியில் நிறுத்திவிட்டுத் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நாளை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்து முருகனை வழிபடுவார்கள். இந்நிலையில் விழா சிறப்பு
ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தோரணங்கள், சிறப்பு வரிசைகள், குடிநீர், தற்காலிக அறைகள், கழிப்பிட வசதி என எந்த வசதியுமே செய்யப்படாதது குறித்து பக்தர்கள் அமைச்சரிடம் முறையிட்டு அதிருப்தி தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் கோபமடைந்த அமைச்சர்
ஆய்வை பாதியில் நிறுத்திவிட்டுத் திரும்பினார். அமைச்சர் பாதியிலேயே திரும்பியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.