தமிழ்நாடு

``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்

நிவேதா ஜெகராஜா

தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, காலணிகளுடன் கோவிலுக்குள் நுழைந்த கட்சியினர் போன்ற சர்ச்சைகளுக்கு இடையே பல குளறுபடிகளுடன் வேலூர் அறங்காவலர் பதவி ஏற்பு விழா நடந்திருக்கிறது.

வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர், அணைகட்டு, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அரசு விழாவான இந்நிகழ்ச்சி துவக்கத்தின் போது இறை வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

இதனை குறிப்பிட்டு இவ்விழாவில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “அறநிலையத்துறை அரசு நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும். அதை பற்றி கவலையில்லை. ஆனால் அறநிலைத்துறையும் அரசு துறை தான். அரசு சார்ந்த நிகழ்ச்சியும் தான். இதனால் தான் இங்குள்ள விளம்பர பதாகையில் கோபுரத்துடன் கூடிய அரசு சின்னம் போடப்பட்டுள்ளது. அதனால் இங்கு தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டும். இன்று அது பாடாதது வருத்தம். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும். வரும் நாட்களில் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என அறநிலை துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் பேசுகையில் “இங்கே பொறுப்பேற்றவர்கள் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் போது சரியான ஆட்களை நியமிக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர், கோவில் நிலத்தை அபகரிப்பவர் போன்றோரையெல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது. அப்படி போட்டால் உங்களை பதவியில் இருந்து நாங்கள் எடுத்துவிடுவோம். என் சாதிக்காரனை போடு, உன் சாதிக்காரனை போடு என இருந்தால் இந்த வேலையே நாசமாக போய்விடும்.

இங்குள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சிறிய இடத்தை பேருந்து நிலையத்துக்கு கொடுத்தால், மேலும் பேருந்து நிலையம் நவீன மயமாக்க உதவும்” என்றார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">15.05.22 - வேலூர் (மா), காட்பாடி தொகுதி சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்களின் தலைமையிலான கழக அரசின் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்கப் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களுடன் பங்கேற்று சிறப்புரையாற்றினோம். <a href="https://t.co/eAjMOJsYIv">pic.twitter.com/eAjMOJsYIv</a></p>&mdash; P.K. Sekar Babu (@PKSekarbabu) <a href="https://twitter.com/PKSekarbabu/status/1526029269146963968?ref_src=twsrc%5Etfw">May 16, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

முன்னதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “திமுக இந்துவிரோத கட்சி, எதிரி கட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள், இந்து சமய அறநிலையத்துறையின் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் பங்கேற்றுள்ளாரே! இது தான் திராவிட மாடல் ஆட்சி” என்றார். அவர் பேசுகையில், “இதுவரை 3 மாவட்டத்துக்கு அறநிலைய துறை அறங்காவலர்களை நியாமித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் 12 மாவட்டங்களுக்கு நியமித்துவிடுவோம். அடுத்த மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படும். இந்த வேலூர் அறங்காவலர் குழு தமிழகத்திலேயே சிறந்த அறநிலையத்துறை அறங்காவலர் குழு என்ற பெயர் எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என அமைச்சர் சேகர் பாபு பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சி செல்லியம்மன் கோவில் கோவிலினுள் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கட்சியினர் பலர் காலணிகளை அணிந்தவாரே கோவிலுக்குள் வந்திருந்தனர். இச்செயல் அங்கிருந்த பக்தர்களிடத்தில் முக சுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் விழா துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றாதது, முறையாக திட்டமிடாதது, தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு என சர்க்குள்ளாகியுள்ளது இந்நிகழ்ச்சி.