தமிழ்நாடு

தாமதமாக வந்த அமைச்சர், ஆட்சியர் - 5 மணி நேரம் பசியுடன் காத்திருந்த மக்கள்

Sinekadhara

திருவண்ணாமலையில், அம்மா க்ளினிக்கை திறந்துவைக்க அமைச்சர் மற்றும் ஆட்சியர் தாமதமாக வந்ததால் பெண்கள் உள்ளிட்டோர் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக பசியுடன் காத்துக் கிடந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அம்மா க்ளினிக் திறப்புவிழா பகல் 12 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மிகவும் தாமதமாக வந்ததால், மாலை 5 மணிக்குத்தான் திறப்புவிழா நடைபெற்றது. இதனால் மணிக்கணக்கில் பசியுடன் காத்துக் கிடக்க நேர்ந்ததால் பயனாளிகள் மற்றும் மக்கள் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.

இதேபோல், வந்தவாசி அருகேயுள்ள குறிப்பேடு கிராமத்தில் அம்மா கிளினிக் திறப்பு விழாவின்போது, பேனரில் தனது பெயர் கீழே அச்சடிக்கப்பட்டிருந்ததால் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத் குமார் அதிருப்தி அடைந்தார். பக்கத்தில் உள்ள செய்யாறு தொகுதி உறுப்பினர் தூசி மோகனின் பெயரை, தனது பெயருக்கு மேலே அச்சிட்டதற்கு அம்பேத்குமார் கண்டனம் தெரிவித்தார். இதனால் அந்த பேனர் அகற்றப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.