தமிழ்நாடு

14 ஆண்டுகள் சிறையிலிருக்கும் கைதிகள் விடுதலை?: சி.வி.சண்முகம் விளக்கம்

14 ஆண்டுகள் சிறையிலிருக்கும் கைதிகள் விடுதலை?: சி.வி.சண்முகம் விளக்கம்

Rasus

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் இதுதொடர்பான கோரிக்கை வைத்த மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.