தமிழ்நாடு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம் - அமைச்சர் சி.வி. கணேசன்

Sinekadhara

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பயிற்சியை அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்திருக்கிறார்.

சிவகங்கையில் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி. கணேசன் பேட்டியளித்தார். அப்போது, ’’தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு விரைவில் மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 25,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். அது 50,000 என அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் கனவாக உள்ளது’’ என்று கூறினார்.
கோடநாடு சம்பவம்: கனகராஜ் மரண வழக்கு மேல் விசாரணையை தொடங்கிய சேலம் காவல்துறை