பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  PT WEB
தமிழ்நாடு

"தமிழ்ப் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்" -அன்பில் மகேஷ் விளக்கம்!

விமல் ராஜ்

"ரூ.1000 பெறக்கூடிய 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்" எனவும், தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து புதியதலைமுறைக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நமது செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் கல்லூரியில் சேரும் போது அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்காக 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அந்த அடிப்படையில் இன்று தாம்பரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் விளக்கம் கூறியுள்ளேன்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள் அரசு சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கித் தரப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கும் "புதுமைப்பெண்" திட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் கல்லூரி சேரும்போது வழங்கப்படும் இது குறித்தும் விழிப்புணர்வு இன்று செய்யப்பட்டது" என்றார்.