தமிழ்நாடு

``மு.க.ஸ்டாலின் More Dangerous Man தான்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!

webteam

“இன்று இருக்கிற ஒரு கட்சி இரண்டாக மூன்றாக நான்காக உடைந்து போய் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றனர்” என அதிமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சென்னை (தெ) மாவட்டம் புனித தோமையர் மலை (தெ) ஒன்றிய இளைஞரணி சார்பாக நடைபெற்ற இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அண்ணன் @Subramanian_ma அவர்களுடன் இணைந்து புகழுரையாற்றி, நலத்திட்ட உதவிகளும் வழங்கினோம்.#பேராசிரியர்100 pic.twitter.com/tSDWpDIc7S
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 22, 2022

இதில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இன்று இருக்கிற ஒரு கட்சி இரண்டாக, மூன்றாக, நான்காக உடைந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டி வருகின்றனர். அதுவும் அவர்களுடையது, கட்சியே கிடையாது... அது கம்பெனி என்று கூறி அடித்துகொள்கிறார்கள்! அது கட்சியோ, நிறுவனமோ எல்லாத்திற்கும் சேர்த்து எம்.டி ஒருவர் இருப்பார். அப்படியென்றால், அந்த கம்பெனிக்கு எம்.டி. ஸ்டாலின்தான். எம்.டி என்றால் மேனேஜிங் டைரக்டர் இல்லை. மோர் டேன்ஜுரஸ் மேன் (More Dangerous Man). அதை தான் எச்.ராஜா சொல்லும் போது `More Dangerous than கலைஞர்’ என்றார்.

மக்களின் நம்பிக்கையாக எப்பொழுதும் திமுக இருக்கும். `நம்பர் ஒன் முதல்வர்’ என்ற பெயரை காட்டிலும் `தமிழ்நாடு நம்பர் ஒன் வந்தால்தான் எனக்கான பெருமை’ என்று உழைத்து கொண்டிருக்கிறவர்தான் நமது முதல்வர். சென்னையில அடிச்ச மழையில் தண்ணியும் நிற்கவில்லை; எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனமும் நிக்கவில்லை. அந்தளவுக்கு உழைத்து கொண்டிருக்கிறவர் நமது முதலமைச்சர் அவர்கள். நாளை நமதே நாற்பதும் நமதே” என்று கூறினார்.

அவரை தொடர்ந்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரிரு ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் முடிந்த பின்பு இந்த சாலைகளை பயன்படுத்தும்போது வெளிநாடுகளில் உள்ளதை போன்ற போன்று உணர்வார்கள். ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு கோடியாவது பயனாளிகளுக்கான திட்டத்தை இன்னும் நான்கைந்து நாட்களில் திருச்சியில் உள்ள சன்னியாசிபட்டியில் தமிழக முதல்வர் வழங்குவார்'' என்றார்.