தமிழ்நாடு

பணத்துக்காக கமல் எதையும் செய்வார்: அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்ச்சல்

பணத்துக்காக கமல் எதையும் செய்வார்: அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்ச்சல்

webteam

நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நூ‌ற்றாண்டு விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் இவ்வாறு குறிப்பிட்டார். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்தி பேசியுள்ளதாகக் கூறினார். கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்றும், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.