தமிழ்நாடு

பால் மாதிரிகளில் தரம் குறைவு - அதிகாரிகள் ஆலோசனை

பால் மாதிரிகளில் தரம் குறைவு - அதிகாரிகள் ஆலோசனை

webteam

மதுரை மாவட்டம் மேலூரில் 17 பால் மாதிரிகளில் பாலின் தரம் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பால்மாதிரிகளை தரப்படுத்துதல் குறித்த இரண்டாம் கட்ட விழிப்புணர்வு முகாம் மேலூரில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பால் மாதிரிகள் இம்முகாமில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 17 பால் மாதிரிகளில் கொழுப்பின் அளவு 3 புள்ளி 5 அளவிற்கு குறைவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மற்ற பால் மாதிரிகளும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.