தமிழ்நாடு

சீனா: சுற்றித்திரிந்த காட்டு யானைகள் வசிப்பிடத்துக்கே திரும்பின

சீனா: சுற்றித்திரிந்த காட்டு யானைகள் வசிப்பிடத்துக்கே திரும்பின

JustinDurai
சீனாவில் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்து திரிந்த காட்டு யானைகள், 1,300 கிலோ மீட்டர் பயணத்துக்குப் பின் தங்கள் வாழ்விடத்தை அடைந்துள்ளன.
யுனான் மாகாண வனப்பகுதியில் வசிக்கும் யானைக் கூட்டங்கள் கடந்த ஆண்டு தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி அடுத்தடுத்த மாகாணங்களில் நடமாடின. ஆறுகளில் குளித்து விளையாடியும், விளை நிலங்களில் பயிர்களை சாப்பிட்டும், சோலைகளில் படுத்து உறங்கியும் விருப்பம்போல திரிந்தன. குட்டிகளுடன் வலசை சென்ற இந்த காட்டு யானைகளின் நீண்ட பயணம், சீனா மட்டுமின்றி உலகின் கவனத்தையே கவர்ந்தன.
வலசையின் போது இவை மோஜியாங் மாகாணம் பியுர் பகுதியில் சில காலம் வசித்தன. இவற்றின் நகர்வுகள் ஒவ்வொன்றையும் சீன அரசு கண்காணித்து வந்தது. பின்னர் தங்கள் வாழ்விடத்துக்கு புறப்பட்ட யானைகள், யுனான் மாகாணம் நோக்கி பயணப்பட்டன. வசிப்பிடத்தை அடைந்து விட்டதன் அடையாளமாக, பாபியன் ஆற்றின் பாலத்தை யானைகள் கடந்த காட்சிகளை சீன வனத்துறை வெளியிட்டுள்ளது.