மதிய உணவுத் திட்டம் pt desk
தமிழ்நாடு

பழனி கோயில் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் மதிய உணவுத் திட்டம்

பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் மதிய உணவுத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கிவைத்தார்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் என 6 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவ மாணவிகளின் நலன்கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

மதிய உணவுத் திட்டம்

இந்நிலையில் மாணவ மாணவிகளுக்கு மதியம் உணவு வழங்கும் திட்டமும் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 5,775 மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மதிய உணவுத் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது மாணவ மாணவிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.