மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலவரம் என்ன.. அதன் பாதை எப்படி இருக்கும்?

Prakash J

வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மிக்ஜாம் புயலாக மாறியது. இதன் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் எதிரொலி காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.