எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர்
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தன் முகநூலில் தரக்குறைவான கருத்தை பகிர்ந்தது தொடர்பாக,
அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், இம்மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த அறிவுறுத்தலும்
வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி,
வழக்கை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையில் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து,
பத்திரிகையாளர்கள் கவின்மலர், முரளிகிருஷ்ணன் ஆகியோர் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளனர்.