தமிழ்நாடு

”எம்ஜிஆரே என்னிடம் கருத்து கேட்டுள்ளார்” - சசிகலாவின் புதிய ஆடியோ

”எம்ஜிஆரே என்னிடம் கருத்து கேட்டுள்ளார்” - சசிகலாவின் புதிய ஆடியோ

webteam

எம்.ஜி.ஆர் உடனும் சேர்ந்து பயணித்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், எம்ஜிஆர் உடனும் தான் பயணித்துள்ளதாக முதல்முறையாக தெரிவித்துள்ள சசிகலா, கட்சி தொடர்பாக எம்ஜிஆரிடமும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய ஆடியோவில் “எம்ஜிஆர் உடன் இணைந்து பயணித்திருக்கிறேன். பலருக்கும் வெளியே தெரியாது. கட்சி தொடர்பான கருத்துக்களை எம்ஜிஆர் என்னிடம் கேட்பார், பொறுமையாக எடுத்துச் சொல்வேன். ஜெயலலிதா கோபமாக முடிவு எடுக்கும்போது, பொறுமையாக பேசுவேன். தொண்டர்களுக்காக நீங்கள் இருக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.