தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : இன்றும் கூடுகிறது அதிமுக உயர்மட்டக்குழு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : இன்றும் கூடுகிறது அதிமுக உயர்மட்டக்குழு

webteam

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்க அதிமுகவின் உயர்மட்டக்குழு இன்றும் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்பி வைத்திலிங்கம் தெரிவித்தார். இந்நிலையில் உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்றும் நடைபெறும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.