முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு மேட்டூர் எம்எல்ஏ செம்மலை நேரில் ஆதரவு தெரிவித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்த செம்மலை, அவருக்கு தனது ஆதரவினைத் தெரிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அவரையும் சேர்த்து 9ஆக உயர்ந்தது. முன்னதாக, எம்எல்ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் இருந்து தப்பிய மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆதரவினை தெரிவித்திருந்தார். அதேபோல முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 12ஆக இருக்கிறது.