கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கன அடி உபரி நீரால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 919 கன அடியில் இருந்து மூவாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 22.42 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையில் நீர் இருப்பு 4.83 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.