தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

webteam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை கார‌ணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,225 கன அடியிலிருந்து 31,236 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாகவும், நீர் இருப்பு 61.39 டி.எம்.சியாகவும் உள்ளது. இதன் காரணமாக சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.