தமிழ்நாடு

பாயும் வெள்ளம் : பாதுகாப்பின்றி பரிசலில் பயணிக்கும் மக்கள் !

webteam

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் இரு மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆபத்தான நிலையில் பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி, கோட்டையூர், செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசல் போக்குவரத்து மூலமாக சேலம், தர்மபுரி மாவட்ட மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் பயணித்து வருகின்றனர். லைஃப் ஜாக்கெட் என்று சொல்லக்கூடிய பாதுகாப்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல் பரிசலில் பொதுமக்கள் அழைத்து செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட விசைப்படகு மற்றும் பரிசல் உரிமையாளர்கள் அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு சாதனங்களும் வழங்காமலேயே அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.