தமிழ்நாடு

மெட்ரோ பணி: ராயபுரத்தில் வெளியேறியது ரசாயன கலவை

மெட்ரோ பணி: ராயபுரத்தில் வெளியேறியது ரசாயன கலவை

Rasus


சென்னை சென்ட்ரல் - திருவெற்றியூர் இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக நடைபெறும் சுரங்கப்பணியின் போது, ஆழ்துளை கிணற்றிலிருந்து ரசாயனக்கலவை வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள் விரிவாக்க‌ம் செய்யப்பட்டு 3-வது கட்டமாக சென்ட்ரலிருந்து திருவெற்றியூர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்க பணியின் போது, ராயபுரம் மேற்கு கல்லறை சாலை பகுதியில் மூடப்பட்ட ஆழ்துளை கிணறிலிருந்து ரசாயன கலவை வெளியேறியது. உடனடியாக அங்கு வந்த மெட்ரோ நிர்வாகத்தினர் ரசாயனக் கலவை வெளியேறாமல் அதனை அடைத்தனர். தற்போது, அங்கு வெளியே கசிந்த ரசாயன கலவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.