தமிழ்நாடு

டிஎம்எஸ் - ஓமந்தூரார் தோட்டம் வரை மெட்ரோ சுரங்க பணிகள் நிறைவு

டிஎம்எஸ் - ஓமந்தூரார் தோட்டம் வரை மெட்ரோ சுரங்க பணிகள் நிறைவு

Rasus

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் முதல் ஒமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை அருகேயுள்ள மே தின பூங்கா வரையிலான மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

3.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டன்னல் போரிங் எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பழுது சீர் செய்யப்பட்டு பணிகள் நேற்று முடிக்கப்பட்டன. 3.7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒருவழி சுரங்க பாதைக்கான பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது முடிந்துள்ளது.

ஏற்கனவே சின்னமலை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையில் சுரங்க‌ப்பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக டிசம்பர் மாத இறுதிக்குள் சின்னமலை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையில் மெட்ரோ ரயிலை இயக்க, அதன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சின்னமலை முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.