தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படுவது தாமதமான நிலையில், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.