சென்னையைத் தொடர்ந்து, கோவை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. சென்னையைத் தொடர்ந்து, கோவை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும்போது குறிப்பிட்டார்.
மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக திட்டமிடப்பட்டிருந்த கலங்கரை விளக்கம் முதல் வடபழனி வரையிலான நான்காவது வழித்தடத்தினை, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்றும், சென்னை புறநகரில் மூன்று மெட்ரோ வழித்தடங்களை ஏற்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.