தமிழ்நாடு

10 வருடத்துக்குள் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்!

webteam

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில் முழுவதுமாக தானாக இயங்கும் வண்ணம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு வருவதாகவும், அந்த ரயில், கட்டுப்பாட்டு மையம் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இதுபோன்ற தானியங்கி ரயில்களை இயக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆவணங்களை மத்திய அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும்‌ அதற்கான பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தானியங்கி ரயில்கள் மூலம் மனிதர்களா‌ல் ஏற்படும் தவறுகள் குறைக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.