தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோவில் இரண்டு நாட்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு இருந்த நிலையில் அக்டோபர் 28- ஆம் தேதியான திங்கட்கிழமையும் அரசு சிறப்பு விடுமுறை விடுத்து உத்தரவிட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களுக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.