வானிலை ஆய்வு மையம்  முகநூல்
தமிழ்நாடு

தமிழகத்தை நோக்கி நகரும் சுழற்சி..! எங்கெல்லாம் கனமழை இருக்கும்? புயல் இருக்கா..?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Uvaram P

ஃபெஞ்சல் புயல் கரையை நிலையில், அந்த சூட்டோடு புது சுழற்சி உருவாகி அது தமிழகத்தை நோக்கி நகர இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் விளக்கிப்பேசியுள்ளார். அதன்மூலம் தெரியவந்துள்ள முக்கியத் தகவல்களை, இங்கே காணலாம்...

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்றைய தினம் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

12ஆம் தேதி அன்று, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரை வடக்கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 13ஆம் தேதி அன்று, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றாலும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றுள்ளார் பாலசந்திரன். இந்த சுழற்சி புயலாக வலுப்பெறாவிட்டாலும், 16ம் தேதி அன்று உருவாக இருக்கும் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.