அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு pt web
தமிழ்நாடு

குளிர்ச்சியான செய்தி.. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வானிலை மையம் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கிரிஷ்ணகிரி, தேனி, நாமக்கல் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் வெப்பம் அதிகரித்த வண்ணமே இருந்துவருகிறது. அதிலும் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகப்படியான வெப்பம் பதிவாகும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வெப்பம்

இதனால் மக்கள் கவலை அடைந்துள்ள நிலையில், நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. அதிலும் கிரிஷ்ணகிரி, தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை பதிவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தசூழலில் மேலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மழை..

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகத்தில் வரும் 24ஆம்தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 21ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை அறிவிப்பு

22 முதல் 24ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.