தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தின் ஓரிருஇடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ஆம்தேதி வரை அதிகாலை வேளையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.