தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைபெய்யும் என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில்மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழககடலோர பகுதிகள், மன்னார் வளைகுடாமற்றும் அதையொட்டிய குமரிக்கடல்பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில்சூறைக்காற்று வீசக்கூடும் எனவும்வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெடுக்கெடுத்து ஓடியது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், பல்லாவரம், அனகாபுத்தூர், பள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையார், தாமிரபரணி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.