தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - கடல்சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

Sinekadhara

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் கடல் சீற்றம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் கடல் சீற்றம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் எனவும், கடல் சீற்றத்தால் 2.5 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவிலும் கடல் சீற்றம் இருக்கும் எனவும், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சென்னையில் அதிகபட்சமாக 6 செமீ, புழல் பகுதியில் 4 செமீ, வில்லிவாக்கம் பகுதியில் 5 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும்,  நந்தனம், அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு தாம்பரத்தில் தலா 4 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.