தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. ஏற்கெனவே கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.