தமிழ்நாடு

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 3 மணிநேரத்துக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு

Sinekadhara

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழக்த்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 30 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு(04-11-2022 மாலை 4 மணி நிலவரப்படி), மித முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது. மேலும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த ஒரு வாரமாக பலத்த  பெய்து வந்ததால் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்திருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலும் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்திருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.