தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Sinekadhara

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் ஞாயிறன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் ஞாயிறன்று காற்றின் வேகம் அதிகமிருக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.