சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருவதால், இந்த அறிவிப்பு மக்களுக்கு கூடுதல் இன்னலை கொடுத்துள்ளது.
இந்த தொடர் மழையால், சென்னை சாலைகளில் கடுமையாக மழைநீர் தேங்கி வருகின்றது. இவற்றை அகற்ற மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.