தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், “தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உள்ளது. தொடர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறி பின் புயலாக மாறும். இதனால் வங்க கடலில் மணிக்கு 40 கிமீ முதல் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தற்போது உருவாகும் இந்த புயல் தமிழகத்திற்கு வராது.
ஆந்திரா அருகே அல்லது பங்களாதேஷ் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே கரையை கடந்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டு. ஒடிஷா, பங்களாகேஷ் சென்றால் தமிழகத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.