தமிழ்நாடு

12 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

12 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Sinekadhara

தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக, அடுத்த 4 நாள்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தேவலாவில் 6 சென்டிமீட்டரும், அவலாஞ்சியில் 5 சென்டிமீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

அடுத்த 4 நாள்களுக்கு மத்திய, தெற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் கடல்பகுதிகளிலும், தென்மேற்கு மத்திய மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.