தமிழ்நாடு

கவிமணிக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: சட்டைப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

webteam

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இரட்டை மாலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் சிலை, மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம், அவரது சொந்த ஊரான, நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் அமைக் கப்படும் என்றும் அறிவித்தார்.

(தேசிக விநாயகம் பிள்ளை)

திருச்சியில் பேரரசர் முத்தரையருக்கும் கோவையில் வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கும் மணி மண்டபம் அமைப்படும் என்றும் அறிவித்தார். சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபமும் ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபங்கள், ரூ.75 லட்சம் செலவில் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

(இரட்டை மலை சீனிவாசன்)

பெனிக்குவிக், வீரன் அழகுமுத்துக்கோன், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். காளிங்கராயன் நினைவை போற்றும் வகையில் அரசு விழா நடத்தப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டார்.