தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணையை தயாரித்து சாதனை

webteam

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணை தயாரித்து பறக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தொழில்நுட்ப மன்றப் பொறுப்பாளரும், பள்ளியின் ஆசிரியருமான சூர்ய குமார் தலைமையில் எட்டாம் வகுப்பு மாணவிகள் பத்து பேர் கொண்ட குழு, ஒரு அடி உயரத்தில் ஏவுகணை மாதிரியை உருவாக்கியுள்ளனர். சிட்ரிக் அமிலம், சமையல் சோடா மற்றும் தண்ணீரை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஏவுகணையை தயார் செய்து, பள்ளி வளாகத்தில் பறக்க வைத்தனர். எதிர்காலத்தில் இதுபோன்று குறைந்த செலவில் அதிக கண்டுபிடிப்புகளை தயார் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.