தமிழ்நாடு

 “மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு  தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்

 “மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு  தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்

webteam

மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த 13 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். 

1996 ஆம் ஆண்டு பட்டியலின சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் முருகேசன் உட்பட ஏழு பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. 

இந்த 17 பேரில் 3 பேர் திமுக ஆட்சி காலத்தில் வயது முதிர்வு காரணமாகவும் , பொது மன்னிப்பு கிடைத்து விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் விடுப்பு சிறை தண்டனையை அனுபவித்து வந்தனர். இவர்களை எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார். விடுதலை செய்யக் கூடாது என பட்டியலின தலைவர்கள் வலியுறுத்தினர். கொலை செய்யப்பட்ட முருகேசனின் மனைவி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்தினர். 

இதனிடையே, கொலையில் தொடர்புடைய மீதமுள்ள 13 பேரையும் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையிலிருந்து நேற்று முன்தினம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இது நீதிக்கு எதிரானது ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர உள்ளதாக வழக்கறிஞர் ரத்தினம் தெரிவித்துள்ளார். 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணை கிடைக்கப்பெற்றதும் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்த அவர், இந்த முடிவு நீதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டார்