தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்

Rasus

மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாது‌வில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தொடக்கம் முதலே தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.